செவ்வாய், 25 நவம்பர், 2008

இறப்பு

எல்லார் வீட்டிலிருந்தும் கண்ணுக்குத் தெரியாத நூலிழைப் போன்ற பாதையொன்று மயான பூமியை நோக்கிச் செல்கிறது

சனி, 8 நவம்பர், 2008

புலர்ந்தும் புலராத பூபாளப் பொழுதுகள்

புலர்ந்தும் புலராத பூபாளப் பொழுதுகள்

(வாழ்க்கையின் நெடுந்தூரப் பயணத்தில் சற்று இளைப்பாற நாம் திரும்பிப் பார்க்கும்போது நம்முள் துளிர்விடுவதெல்லாம் என்றும் இனிக்கும் நம் இளைய வயது பொழுதுகளே. இந்தக் கட்டுரை 1991ல் ஏப்ரல் மாதத்தில் விக்கோரியா தோட்ட முன்னாள் மாணவர் மன்றத்தின் காலாண்டு இதழான ‘தென்றலுக்கு’ நான் எழுதியது. நானே ‘தென்றல்’ இதழாசிரியாரானதால் இக்கட்டுரைகளை என் சொத்துகளாக சேர்த்து வைத்துள்ளேன். இந்த எழுத்துகளைத் திரும்பப் பார்க்கும்போதெல்லாம் அந்த வயது என்னில் வாழ்வது போன்ற உணர்வெழும். இந்தக் கட்டுரையில் என்னோடு வாழ்ந்த மண்ணும் மனிதர்களும் உங்களுக்குள்ளும் தெரிவார்கள். சுருதி மாறாமல் அப்படியே பதிவு செய்திருக்கிறேன்)

நெஞ்சகக் கூட்டில் நான் பத்திரமாகப் பதுக்கி வைத்த நினைவுப் புறாக்கள் மீண்டும் என்மனவானத்தில் சிறகடித்துப் பறக்கின்றன. தோட்ட குடில்களுக்கிடையே நான் ஊடாடி புகுந்தோடியபோதெல்லாம் தேனிசைக் கீதங்களாக என் செவிமடல்களில் பாய்ந்திட்ட பழம்பாடல்களை இன்று கேட்க நேரிடும்போது இறந்த காலத்தின் இனிய நினைவுகள் பெளர்ணமியாய் என்னுள் பிரகாசிக்கிறது. என்னையே நான் உள்முகப்படுத்தி என் இளையகால நினைவுகளோடு உவகைப் பொங்க நீராடுகின்றேன்.
அன்றொரு நாள்.... வேய்ங்குழல் நாதம் வானொலியில் இழையோட பொலபொலவென விடிகின்ற பூபாளப் பொழுதில் உணர்வுகள் விழித்திட்டும் இமைகள் விரித்திட மறுக்கும் வேளையில் எங்கள் தோட்டத்தில் ‘வெண்கலக் குரலோன்’ தண்டல் பொன்னுசாமியின் குரலினூடே தோட்டப் பாட்டாளிகள் ‘பெரட்டு’ முடிந்து வரும் இறைச்சலும் கேட்கும். தொடர்ந்தாற்போல் செல்லப்பன் பிள்ளைகளின் ‘இட்டிலி’,`தோசை’ கூக்குரல் தவறாமல் வீட்டைக் கடந்து செல்லும்.
அந்த ‘இட்டிலி’,`தோசை’ விற்கும் சிறுவர்களின் சுறுசுறுப்பையும் கூவிச் செல்லும் உற்சாகத்தையும், தாத்தா என் சோம்பேறித்தனத்தோடு ஒப்பிட்டு பேசும்போதெல்லாம் அவ்வதிகாலை வேளையிலே எரிச்சலும் கோபமும் வரும். எழுந்ததும் முதல் வேலையாக அந்த பையன்களை நாளை காலையில் என் வீட்டுப் பக்கம் வரக்கூடாது என்று எச்சரிக்கத் தோன்றும்.
என் வயதொத்த அந்தச் சிறுவர்களை இன்று என்னைப் போன்ற இளைஞர்களாகப் பார்க்கின்றேன். வாழ்க்கையிலும் உருவத்திலும் நன்கு வளர்ந்திருக்கின்றார்கள் ஆனாலும் என்னைவிட சுறுசுறுப்பு குறைந்தவர்களாகவே இருக்கின்றனர் என்பதை என்னோடு ஒப்பிட்டு பேசிய தாத்தாவிடம் சொல்லத் தோன்றுகிறது. ஆமாம் தாத்தாதான் இப்ப இல்லையே.
இளையப் பருவத்தில் கேட்பாரும் மேய்ப்பாருமின்றி அலைந்து திரிந்த பொழுதுகள் மிகமிக அற்புதமானவை. என் நண்பர்களோடு அடுப்பெரிக்க விறகு பொறுக்க மிதிவண்டியை சரிவர ஓட்டத் தெரியாத நிலையிலும் எடுத்துக்கொண்டு குதூகலத்தோடு ரப்பர் மரக்காடுகளுக்குச் செல்வோம். ஆளுக்கொரு பக்கமாய் விழுந்து கிடக்கும் கிளைகளை வெட்டி கட்டுவதுண்டு. சில வேளைகளில் காய்ந்த கிளைகளைத் தேடி மரமேறி வெட்டி வீழ்த்துவதுமுண்டு.
எங்கள் உயரத்துக்கும் அதிகமான விறகுகளை மிதிவண்டியிலே ஏற்றி சமாளிக்க முடியாமல் தள்ளாடி தள்ளாடி பலமுறை குடைசாய்ந்து இறுதியில் வீடடையும் இன்பம் இருக்கிறதே அதை சொல்லி முடியாது. மாலையில் என் போன்ற பிள்ளைகள் பிளந்த விறகுகளை சதுர வடிவில் அடுக்கி வைத்து விளையாடும் விளையாட்டு அதைவிட மேலானது.
தோட்டத் திருவிழாக் காலங்கள் என்றும் மனதுக்குள் பூமழை தூவுகின்ற மகிழ்ச்சியான நாட்கள். திருவிழா வருவதற்கு முன்பே நாங்கள் நகரும் நாட்களை போகவிடாமல் நன்றியோடு எண்ணிக் கொண்டிருப்போம். மாலையில் கோயிலுக்குப் பிள்ளைகளை அழைத்துச் செல்வதற்காக தோட்ட நிர்வாகம் ‘டிரக்டர்களை’ ஏற்பாடு செய்து தரும்.
இரவு கோயில் உபயத்தில் கலந்து கொள்வதற்காக பிள்ளைகள் அடித்துப் பிடித்துக் கொண்டு ஏறிச் செல்வோம். ஒருமுறை அவ்வாறு செல்லுகையில் ‘டிரக்டர்’ ஓட்டுநர் முருகையா குடிபோதையில் வேகமாக செலுத்தியதால் நானும் சில நண்பர்களும் கீழே விழுந்து சொற்ப காயங்களோடு தப்பித்த அனுபவமும் உண்டு.
திருவிழாவிற்கு முன் நடக்கும் சிறப்பு உபய நாட்களில் தவறாமல் கோயிலுக்குச் செல்வோம் கடவுள் பக்தியினாலல்ல, ஆட்டம் போடத்தான். ஒருநாள் குறும்புமிக்க சிறுவனொருவன் தாரை தப்பட்டை கட்டிவைக்கப்பட்டுள்ள துணியில் அதையெடுத்துவிட்டு நாய்க்குட்டிகளை வைத்துவிட்டான். தப்பட்டையை எடுக்க வந்த அப்பாதுரை ஒட்டு மொத்தமாக கொச்சை மொழியில் அர்ச்சனை செய்தது மறக்க முடியாதது.
சாமி ஊர்வலம் முடிந்து அளிக்கப்படும் பொங்கலை அடித்துப் பிடித்து வாங்கிக் கொண்டு ‘டிரக்டர்’ எறி வீடு வந்து களைப்போடும் வியர்வையோடும் தூங்குவோம். சாமி ஊர்வலம் தோட்ட நிர்வாகி, கிராணி வீடுகளுக்குச் செல்லும்போது எனக்கு மடற்ற மகிழ்ச்சி ஏற்படும். தோட்ட நிர்வாகி வீடு குன்றிலிருப்பதால் இரவு வேளையில் ‘டிரக்டரில்’ ஆடி அசைந்து கூட்டத்தோடு செல்வதில் தனிச் சுகமிருக்கும்
திருவிழாவின்போது மக்கள் கூட்டத்தையும் காவடிகள் அசைவதையும் காண்பதில் ஆர்வமிருந்தபோதும் தோட்ட மக்களின் பொருளற்ற சமயக் கூத்துகளைப் பற்றி பல புரியாத கேள்விகள் என்னுள்ளே வேர்விடத் தொடங்கியது. அந்த புதிர்கள் வளர்ந்து என்னை நாத்திகத்தின்பால் ஈர்த்தது என்பது வேறுகதை. ஒருமுறை திருவிழா ஊர்வலத்தின்போது கரகாட்டக் குழு ஆட வந்திருந்தது. கரகாட்டம் நடக்கும் ‘ஆயக் கொட்டகையின்’ எதிர்ப்புறம் ஒரே சலசலப்பு. எங்கள் தோட்டத்து சங்கீத சிரோன்மணி ‘அடுப்பூதி’ வழக்கம்போல் மது அருந்திவிட்டு ‘பாட்டுக் கச்சேரி’ செய்தது தனிச்சுவை.
தோட்ட மக்களிடையே ‘சாமி’ பார்ப்பது என்பது மிகவும் ஈர்ப்பான ஒரு நடவடிக்கையாகவே எனக்குப் பட்டது. ஓரிரவு திடீரென ‘சிம்டா’ என்பவருக்கு ‘சாமி’ வந்திறங்க அதற்குப் போட்டியாக ‘புஷ்பா’ என்னும் பெண்ணுக்கும் ‘சாமி’வர தோட்டமே திரண்டு அவர்கள் பின்னோடி வேப்பமரத்தடியில் கூடிநிற்கின்றனர். நான் பயங்கலந்த மனத்தோடு நடப்பதைக் கூர்ந்து பார்க்கின்றேன். அந்த ‘சாமியாடும்’ இருவரும் அந்த இரவில் வேப்பமரத்தில் ஏற எத்தனித்தபோது பெரிய மீசை ஏழுமலை கணீர் குரலில் அதற்கு தடைவிதிக்க அதற்கு ‘சாமிகள்’ மறுக்க கோபப்பட்ட மீசைக்காரர் பிரம்பை எடுத்துக் கொண்டு விரட்ட ‘சாமிகள்’ ஓட்டம் பிடித்தது இன்றும் சிரிப்பூட்டுகிறது. மறுநாள் தோட்டம் முழுவதும் இச்சம்பவம் இனிக்க இனிக்கப் பேசப்பட்டது.
ஒருமுறை தோட்டத்தில் ஒருவரின் ‘செய்வினை’ நீக்குவதற்காக வரவழைக்கப்பட்ட ‘சங்கலி கருப்பன்’ சாமி கோழி தொடையை கடக்கு முடக்கென்று ஆவேசத்தோடு கடித்து சாப்பிட்டதும் தன்னையே சாட்டையால் மாறிமாறி அடித்துக் கொண்டதும் கண்டு இரவெல்லாம் பயத்தால் எனக்கு வியர்த்தது. அதேபோன்று நானும் என் பால்ய நண்பன் பிரகலாதனும் அடிக்கடி செல்லும் ‘கட்டை வெட்டி’ வீட்டில் நண்பரின் அக்காவுக்கு ‘சாமி’ வந்தது. அங்கே அவர்கள் குடும்பமே ‘சாமி’ பார்த்துக் கொண்டிருக்கையில் நெடுநேரம் நின்று ஆடியதால் ‘சாமி’ தன்னை ஏன் உட்கார வைக்கவில்லை என்று கோபித்துக் கொண்டு என்னை நாற்காலி எடுத்து வர கட்டளை இட்டதை நினைத்தால் நானே சிரித்துக் கொள்வேன்.
தோட்டத்தில் கிராமத்து தேவதை ‘மாரியம்மாவுக்கு’ அடுத்து ‘முனியாண்டி’,’மதுரை வீரன்’ போன்ற சிறுதெய்வ வழிபாடு நிறைய இருக்கும். ரப்பர் மரக் காடுகளிலும் புற்றுகளிலும் பழைய ‘குத்துக் கட்டை’களிலும் இந்த வழிபாடு பிரசித்தம். அப்போதெல்லாம் நானும் நண்பர்களும் சாப்பிடுவதற்கென்றே இவ்வழிபாடுகளில் கலந்து கொள்வோம். இங்கே தோட்ட மக்கள் உறவுமுறை கொண்டாடுவது, கூட்டமாக சேர்ந்து சமைப்பது, கனிவோடு பரிமாறுவது போன்ற மனித உணர்வுகள் என்னுள் ஏக்கத்தை ஏற்படுத்துகிறது. மண் தரையில் ரப்பர் மரவேர்களுக்கிடையில் அழுக்குப் படிந்த கைகளோடு அந்த வெள்ளையுள்ள மனிதர்களால் பரிமாறப்பட்ட அந்தச் சோற்றின் சுவை எங்கு தேடினும் கிடைக்காது.
அறியாமையால் உழன்ற அந்தப் புலராத பொழுதுகளில் பொருள் புரியாத செயல்களெல்லாம் அளவற்ற இன்பத்தை தந்தது. அறிவு வெளிச்சம் நுழைய அறியாமையின் இருள் மெல்ல விலக வாழ்க்கையின் தேடல் வேறு இலக்கு நோக்கி சென்றுவிட்டது. சரியோ தவறோ நான் என் தோட்ட மக்களோடு ஒன்றிவாழ்ந்து அனுபவித்த அந்த பூபாளப் பொழுதுகள் என்றுமே அழியாத கல்வெட்டுகளாய் நிலைத்திருக்கும். அந்தக் கரவற்ற தோட்ட மண்ணோடும் மக்களோடும் வாழ்ந்த வாழ்க்கை எனக்கு கிடைத்த வரம் மட்டுமல்ல வாழ்க்கைக்கு உரம். அந்த மண்ணும் மக்களும் என்றும் என் ஆராதனைக்குரியவர்கள்.

( இதைப் படிப்பவர்கள் மலேசியாவில் ஏதேனும் தோட்டத்தில் பிறந்து வளர்ந்திருப்பின் கட்டுரையின் சாரம் நன்கு புரியும். அவர்களும் தாங்கள் வாழ்ந்த தோட்டத்து பின்னணியை நினைத்துப் பார்க்க இக்கட்டுரை தூண்டுமேயாயின் அதுவே சிறப்பு. உலகளாவிய தமிழர்களுக்கு மலேசிய தோட்டப்புற மக்களின் வாழ்க்கை முறையின் சிறு பதிவாக முன் வைக்கின்றேன்)

முருகா

எழும்போதும் வேலும்மயிலும் என்பேன்,
எழுந்தே மகிழ்ந்து தொழும்போதும் வேலும்மயிலும் என்பேன்,
தொழுதே உருகி அழும்போதும் வேலும்மயிலும் என்பேன்,
அடியேன் சடலம் விழும்போதும் வேலும்மயிலும் என்பேன், செந்தில் வேலவனே

அரிசி முளைக்குமா?

பகவானே,” இந்து சம்பிரதாயத்தில் உயர்ந்த வேதாந்தமும் கூடவே பலவித கிரியைகளும் திருவிழாக்களும் மந்திர தந்திரமுறகளும் இருப்பதன் காரணமென்ன?’
மகனே “நெல்லில் முக்கியமான பொருள் அதனுள் இருக்கும் அரிசியே. அரிசியை மூடிக்கொண்டிருக்கும் உமியை குத்தி எடுத்துவிட்டுதான் அரிசியைப் பயன்படுத்துகிறோம். ஆனால் அரிசி நாள்பட நிற்காது; கெட்டுப் போகும். நெல்லாக இருந்தால் நெடுநாள் கெடாமல் நிற்கும்.
அரிசியை வயலில் விதைத்தால் பயிருண்டாகாது; நெல்லை விதைத்தால்தான் முளைக்கும். அரிசிதான் முளைப்பதாயினும் அது உமியால் மூடப்பட்டு நெல்லாக நிலத்தில் பதிந்தால்தான் முளைவிட்டு வளரும்.
நம்முடைய கர்மத்திற்குக் காப்பாகவும், உயிர் கொண்டு வேரூன்றி வளர்ந்து பயிர் கொடுப்பதற்காகவுமே கிரியைகளும் சடங்குகளும், திருவிழாக்களும் நெல்லின் உமி போல் அமைக்கப்பட்டன். அரிசிதான் வேண்டும்.
ஞானமடைந்தவனுக்குக் கிரியைகளும் சடங்குகளும், திருவிழாக்களும் கோயிலும் வேண்டியதில்லை ஆனால் இவையில்லாமல் ஞானம் மட்டும் தனித்து உபதேசிக்கப்பட்டு இந்து தர்மம் முறையாக வைக்கப்பட்டிருந்தால் அது வேரூன்றிப் பயிராக விளைந்திராது. வயலில் போடப்பட்ட அரிசியைப்போல் முளைவிடாமல் அழிந்து போயிருக்கும்.”

அம்பாள் சொன்ன வழி

குருதேவருக்கு தொண்டையில் வலி ஏற்பட்டு சிரமப்பட்டார். உணவு சிறிதும் உண்ண முடியவில்லை. மருத்துவம் செய்து கொள்ள சீடர்கள் வற்புறுத்தினர். மறுத்தார் பகவான்.
“எல்லாம் அன்னை காப்பாற்றுவாள் என்கீறீர்களே எங்களுக்காக அவளிடம் வேண்டிக்கொள்ளுங்கள்” என்றான் அன்போடு விவேகாநந்தர். “சரி உனக்காக அவளிடம் கேட்கிறேன்” என்று உள்ளே சென்று சிறிதுநேரம் கழித்து திரும்பினார் பகவான்.
“அம்பாளிடம் சொன்னீர்களா?”, கேட்டார் விவேகாநந்தர் ஆவலோடு.
“சொன்னேன், தொண்டையில் வலிக்கிறது. உணவு உண்ண இயலவில்லை. உண்பதற்கு ஏதாவது வழி செய் என்றேன் அடற்கு அம்பாள், “நீதான் உன் சீடர்களின் வாய் மூலமாகச் சாப்பிட்டுக் கொண்டுதானே இருக்கிறாய், பிறகென்ன” என்று கேட்டாள். எனக்கு வெட்கமாய்ப் போய்விட்டது, வந்துவிட்டேன்” என்றார் குருதேவர்.

குருதேவர் பதில்

நான்கைந்து நாட்கள் தொடர்ந்து தியானத்தில் ஆழ்ந்து, கண்களை மூடிய வண்ணமே இருந்து “கடவுளை நான் பார்க்க வேண்டும், அதற்கு நீங்கள் அருள்புரிய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார் சுவாமி விவேகாநந்தர்.
குருதேவர் இராமகிருஷ்ணர் பதில் சொன்னார்,” ஏன் கண்களை மூடிக் கொண்டு கடவுளைக் காண வேண்டும் என்று விரும்புகிறாய். இந்த மண்ணில் இருக்கும் ஏழைஎளிய மக்களைக் கண்கொண்டு பார், அதுதான் கடவுள் காட்சி.

மரங்களின் கேள்வி

ஏ! மனிதனே எங்களை வெட்டி ஆயிரம் சிலுவைகள் செய்யத் தெரிந்த உங்களுக்கு ஏன் ஓர் இயேசுவைக்கூட உருவாக்கத் தெரியவில்லை

கடவுள்

கடவுள் என்பது வடிவமல்ல; தன்மை. ஒரு மரத்தை வெட்டும்போது கடவுள் தன்மை காயப்படுகின்றது. ஒரு பூவை கசக்கும்போது இறைமை இம்சிக்கப்படுகிறது.

கண்களில் பூக்கின்ற மலர்கள்

கனவுகள் அழகானவை; கண்களில் பூக்கின்ற மலர்கள் அவை. வெள்ளைத் தாள்களுக்கு விழி முளைத்துக் கொண்டது. இந்த இளைய நட்சத்திரத்திற்குள் ஒரு பௌளர்ணமி வடிவம் பளிச்சென்று தெரிகிறது.

அழியாத ஓவியங்கள்

இந்தச் சமுதாய வீதியில் கைவீசி நடக்கும் ஒவ்வொரு மனிதனின் அடிமனத்திலும் சில சுவடுகள் அழியாத ஓவியங்களாய் ஆழமாய்ப் பதிந்து கிடக்கின்றன. மனிதனின் நெஞ்சம் ஒரு மோசமான மயான பூமி அதில்தான் எத்தனை நினைவுகள் கல்லறைகளுக்குள் கண் துயில்கின்றன

வணக்கம்

அன்புத் தாயவளை மனதில் கொண்டு
அமுதத் தமிழ்மொழியை நாவினில் பூண்டு
செந்தமிழின் சிறப்பதனைக் கருத்தினில் மொண்டு
சந்தனத் தமிழால் தமிழ்மாறன் கூப்புகிறேன் கைகள் இரண்டு

எழுதமிழா

ஊனத் தசைதான் தமிழுடலோ? அட
உணர்ச்சி கடவுள் தரவில்லையோ
ஏனம் சுமந்து பிழைப்பதற்கோ பிறன்
எச்சில் பொறுக்கவோ தமிழரினம்
எனச் சரிதை கிழியப் புதியதோர்
ஏடு படைப்போம் எழுதமிழா
-காசி ஆனந்தன்

சிந்தனை

சிந்தனை உனக்குத் தந்தேன்
திருவருள் எனக்குத் தந்தாய்
வந்தனை உனக்குத் தந்தேன்
மலரடி எனக்குத் தந்தாய்
பைந்துணர் உனக்குத் தந்தேன்
பரகதி எனக்குத் தந்தாய்

இன்று புதிதாய்ப் பிறந்தோம்

ஒவ்வொரு நாளும் புலர்க்காலைப் பொழுதின் விடியலும் புதிதே. ஒவ்வொரு நாளும் முகையவிழ்ந்து மலர்கள் மலர்வதும் புதிதே. ஒவ்வொரு நாளும் பூமித்தாயின் திருமடியில் பல்லாயிரம் உயிர்கள் பிறப்பதும் புதிதே. நித்தம் நித்தம் புதுமலராய் நம்மைச் சுற்றியுள்ள இயற்கை அனைத்தும் மலரும்போது மனிதன் மட்டும் மலராமல் இருப்பது முறையாமோ?. ஒவ்வொரு நாளும் முடிந்தால் ஒவ்வொரு நொடியும் மனித வாழ்வில் ஏதேனுமொன்று பதிதாய் முகிழ்க்க வேண்டும் ஆக பாரதி கூற்றுக்கொப்ப இன்று புதிதாய்ப் பிறந்தோம் இன்றே இப்பொழுதே முழக்கம் செய்வோம்.

திருவருள்

சிந்தனை உனக்குத் தந்தேன்
திருவருள் எனக்குத் தந்தாய்
வந்தனை உனக்குத் தந்தேன்
மலரடி எனக்குத் தந்தாய்
பைந்துணர் உனக்குத் தந்தேன்
பரகதி எனக்குத் தந்தாய்

வணக்கம்

அன்புத் தாயவளை மனதில் கொண்டு
அமுதத் தமிழ்மொழியை நாவினில் பூண்டு
செந்தமிழின் சிறப்பதனைக் கருத்தினில் மொண்டு
சந்தனத் தமிழால் தமிழ்மாறன் கூப்புகிறேன் கைகள் இரண்டு
பழைய கணக்கீட்டு முறைகள்
தமிழர்களின் பழைய கணக்கீட்டு முறைகள் மிகவும் வியப்பானவை. மிகவும் நுட்பமான கணக்கீட்டு முறை அவர்களிடமிருந்தது. நுண்மையான அளவுகளிலிருந்து பெரிய அளவுகளை விரிவாய்க் கணக்கிட்டனர். அவர்களின் நீட்டல் அளவு முறை கீழே

8அணு - 1தேர்த்துகள்
8தேர்த்துகள் - 1பஞ்சிழை
8பஞ்சிழை - 1மயிர்
8மயிர் - 1நுண்மணல்
8நுண்மணல் - 1கடுகு
8கடுகு - 1நெல்
8நெல் - 1பெருவிரல்
12பெருவிரல் - 1சாண்
2சாண் - 1முழம்
4முழம் - 1கோல்(அ)பாகம்
500கோல் - 1கூப்பீடு

படிப்பதே இன்பம்

படிப்பதைப் போன்று இன்பம் தரும் செயல் வேறொன்றில்லை; அதிலும் அறிவார்ந்தவர்களால் பொருள்,சொல்,கலை நயத்தோடு எழுதப்பட்ட நூல்களைக் ஆழ்ந்து கற்பது அமுதுண்பதற்கு ஒப்பானது.
நல்ல நூல்கள் ஒரு மனிதனை நெறிபடுத்துவதோடு வாழ்வின் உன்னதமான உயர்வுக்கு இட்டுச் செல்லும் வலிமை மிகுந்தவை.
நல்ல நூல்களோடு நட்புறவு கொண்டவன் தன் வாழ்வையே சத்திய வேள்வியாக்கி வலிமைப் பெற்றொளிருகிறான்.
நாம் ஆயுள் முழுதும் படித்தாலும் கரைகாணா அளவிலே தமிழில் சங்ககால இலக்கியப் படைப்புகள் கடலென விரிந்தும் ஆழ்ந்தும் கிடக்கின்றன.
கல்விக் கூடங்களில் தேர்வுக்காக அங்கொன்றும் இங்கொன்றும் அலசுவதோடும் மேடை சொற்பொழிவுகளுக்கு மேற்கோள் காட்டுவதோடும் அதன் பயன்பாடு முடிவடைந்து விடுகின்றன.

நட்புறவு

என் இளவேனிற் கால தொடக்கமே கல்லூரியில்தான் துளிர்விட்டது. என்னுள்ளேயும் வெளியேயும் இளமை எழில்கோலம் வரைந்த இனிய வசந்தமது. என் பார்வையில் அழகும் ஆர்வமும் ஆசையும் அரும்பி வழியும் தேவ காலமது.
எதையும் இதயத்தோடு இணக்கமாக இணைத்து அணுஅணுவாய் இரசித்து உருசித்துப் பார்க்கும் பெருநெருப்பு நெஞ்சில் எரிந்து கொண்டிருக்கும்.. அறிவின் வேர்களை அகழ்ந்தாயத் துடிக்கும் ஆர்வம் மறுபுறம் மூளையில் முளைவிட்டு எழும். இதயத்துக்கும் மூளைக்கும் அடிக்கடி போராட்ட்ம் நிகழும். பெரும்பாலான வேளைகளில் இதயமே வெற்றி வாகைச் சூடும்.
அந்த இனிமையான பொழுதுகளில் என் இதயம் அதிகம் இளைப்பாறிய இடம் தமிழிலக்கிய நூல்களே. கல்லூரியின் நூலகத்தில் என்னென்ன நூல்கள் எங்கெங்கு உள்ளன என்பதை முழுமையாக அறிவேன். என் கை தொடாத தமிழ்நூல் இல்லையெனும் அளவுக்கு எனக்கும் நூல்களுக்குமுள்ள நட்புறவு பின்னிப்பிணைந்திருந்தது.
கல்லூரி நூலகம் எனக்கு அறிமுகப்படுத்திய உன்னத நண்பர்கள் பலர். அவர்களோடு எத்துணப் பொழுதுகள் ஆத்மார்த்தமாக உலவியிருக்கிறேன். எத்தனையோ கருத்து முரண்பாடுகளோடு கட்டிப் புரண்டு, சிந்தனை சிதறல்களால் சிக்குண்டு குழம்பியப்பின் தெளிந்து கூடிக்குலவி கரைகாணா காதலால் கட்டுண்டு, எனக்குள்ளே வேள்வி நடத்தியிருக்கிறேன்.
பள்ளிக் காலத்தில் விதையாய் விழுந்த பாரதியின் சில தெறிப்புகள் என்னுள் விருட்சமாய் வளர்ந்தது கல்லூரி நந்தவனத்தில்தான். டாக்டர் மு.வ., நா.பா, அகிலன், ஜெயகாந்தன் என நான் செவிவழி அறிந்திருந்த அவர்களின் ஆழம் தெளிவாய் புரிய வைத்தது கல்லூரி காலம்தான்

ஞாயிறு, 2 நவம்பர், 2008

தமிழுடன் பிறந்தோம்

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த

தமிழுடன் பிறந்தோம் நாங்கள்

தமிழின் இனிமை

செந்தமிழ், பைந்தமிழ், அருந்தமிழ், நறுந்தமிழ், தீந்தமிழ், முத்தமிழ், ஒண்டமிழ், தண்டமிழ், வண்டமிழ், தெளிதமிழ், இன்றமிழ், தென்றமிழ், நற்றமிழ், தெய்வத்தமிழ், மூவாத்தமிழ், கன்னித்தமிழ்

பொறுத்தருள்வாய் இறைவா!

"கல்லாத பிழையும் கருதாப் பிழையும்
கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்
நின் ஐந்தெழுத்தும் சொல்லாப் பிழையும்
துதியாப் பிழையும் தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே !

"கச்சியேகம்பனே ! உன் பெருமைகளைக் கல்லாத பிழை; பெருமைக்குரிய உன்னை கருதாத பிழை; கருதியப் பின் கசிந்து உருகாத பிழை; உன் திருவடிகளை நினைந்து போற்றா பிழை ; உனக்குரிய ஐந்தெழுத்தை ஓதாத பிழை; எப்பொழுதும் உன்னையே துதிக்காத எல்லா பிழைகளையும் பொறுத்தருள வேண்டுகிறார் பட்டினத்தடிகளார்
.

Take time to think

Take time to think –
Thoughts are the source of power
Take time to play –
Play is the secret of perpetual youth
Take time to read –
Reading is the fountain of wisdom
Take time to love –
Loving is what makes living worthwhile
Take time to laugh –
Laughter is the music of soul
Take time to give –
Any day of the year is too short for selfishness
Take time to be friendly –
Friendships give life a delicious flavor
Take time to show appreciation –
Thanks is the frositing on the cake of life
Take time to do your work well –
Pride in your work, no matter what it is,
Nourishes the ego and the spirit
Take time to pray –
Prayer can be a rock of strength in time trouble

குடும்பம் ஒரு கோயில்

உறவுகளின் தொகுப்பாய் உருவெடுத்ததுதான் குடும்பம். தாத்தா-பாட்டி தொடங்கி பேரன்-பேத்தி என ஆலமரமாய் ஆயிரம் விழுது பரப்பிய குடும்பம்தான் இன்று உறவுகளைத் தவிர்த்து ஒற்றைப் பனை மரமாய் ஒதுங்கி நிற்கிறது.

அன்பின் அடித்தளத்தில் எழுந்து நின்ற குடும்பக் கோவில் இன்று பொருள் தேட்டம், இன்ப நாட்டம் என்ற அந்நியக் கலாச்சாரச் சூறைக் காற்றில் ஆட்டங்கண்டு சிறந்த விழுமங்களை இழந்து விழுந்து கிடக்கிறது.

நம் முன்னோர்களின் இல்லற வாழ்வை இனிதாகக் காட்டுவது திருக்குறள். அறம் சார்ந்த வாழ்வும், அன்பு சார்ந்த உறவுந்தான் தமிழர்தம் குடும்பங்களின் அடித்தளம். ‘அறத்தான் வருவதே இன்பம்’ என்று நினைத்தவன்தான் தமிழன்.

’அன்பின் வழியது உயிர்நிலை’ வாழ்ந்தவன்தான் தமிழன். அகவாழ்வின் பண்பாடும், புறவாழ்வின் நாகரிகமும் பழுதுபடாமல் பார்த்துக் கொண்டதுதான் தமிழினம். ஆனால் இன்று ..நினைக்கவே நெஞ்சம் நோகிறது.

ஆணும் பெண்ணும் சேர்ந்து, அன்பு சார்ந்து, அறத்தின் வழியில் நடத்துவதுதான் இல்லறம். ஒருவனும் ஒருத்தியும் கூடி வாழும் இடம்தான் வீடு. துன்பங்களிலிருந்து விடுபட்டு, ஆன்மா பேரின்பத்தில் திளைப்பதுதான் வீடுபேறு.

நம்மைச் சுற்றி இருப்பவர்கள், நம்மோடு பழகுபவர்கள் உணர்வுகளை இன்னும் சற்று விழிப்போடு கையாளுவதுதான் உண்மையான பிராத்தனை.
- வாழ்வே தவம்இறந்த பின்பு அடையும் இன்பத்தை இருக்கும்போதே அடைவதற்கான இடமே வீடு. துன்ப நீக்கமும் இன்ப ஆக்க்மும் உள்ள இடம்தான் உண்மையான வீடு.

சென்றதினி மீளாது

சென்றதினி மீளாது மூடரே!
நீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்துகுமையாதீர்!
சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர்

எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளையாடியின் புற்றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா. – பாரதி

கடைசியாய் இருப்பதே

கடைசியாய் இருப்பதே பிடித்திருக்கிறது
யாரும் பின்னுக்குத் தள்ளாமல்
எத்தனை பேர் வந்தாலும்
தக்கவைத்துக் கொள்வதில்
தகராறு இல்லாமல்
போட்டி இல்லாமல்
சலனமற்று ஆழ்ந்திருக்க உதவுவதால்!
நின்றிருக்கும் நீள் வரிசையையே
வட்டமாக மாற்றத் தெரிந்து கொண்டால் யார் கடைசி?
யார் முதல்?
- வெ. இறையன்பு.

புத்தகங்களே! குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள்

பித்தன் மழைக்காகப் பள்ளிகூடத்தில் ஒதுங்கினான்.
குழந்தைகளின் கையிலிருந்த புத்தகங்களைப் பார்த்து
புத்தகங்களே சமர்த்தாயிருங்கள் குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள் என்றான்
அவன் மேலும் சொன்னான்...குழந்தைகளே பாடப் புத்தகங்களாக இருக்கிறார்கள்
அவர்கள் கையில் ஏன் காகிதக் குப்பைகளைத் தருகிறீர்கள்?
உங்கள் புத்தகங்கள் கண்களைத் திறப்பதில்லை
ஊற்றுக் கண்களைத் தூர்த்து விடுகின்றன
காகித ஓடங்களை நம்பி இருப்பவர்களே!
நீங்கள் எப்படி அக்கரை போய்ச் சேர்வீர்கள்?
இதோ! இரவு பகல் என்ற ஏடுகள்உங்களுக்காகவே புரளுகின்றன
நீங்களோ அவற்றைப் படிப்பதில்லை
இதோ உண்மையான உயிர் மெய் எழுத்துக்கள்உங்கள் முன் நடமாடுகின்றன
நீங்களோ அவற்றைக் கற்றுக் கொள்வதில்லை
ஒவ்வொரு பூவும் பாடப் புத்தகமாக இருப்பதைநீங்கள் அறிவதில்லை.
நீங்கள் நட்சத்திரங்களைப் படிக்க கற்றிருந்தால்
உச்சரிக்க முடியாத எழுத்துக்களில் அதிகமான அர்த்தம் இருப்பதை அறிந்திருப்பீர்கள்
நீங்கள் மின்னலின் வாக்கியங்களை வாசிக்க முடிந்திருந்தால்
ஒளியின் ரகசியத்தை அறிந்திருப்பீர்கள்,
உங்களுக்குக் கண்ணீர்த் துளிகளைப் படிக்கத் தெரிந்திருந்தால்
நீங்கள் மனிதனின் சாரத்தை அறிந்திருப்பீர்கள்.
எழுத்துக்களால் அல்ல காயங்களால் கற்பதே கல்வி என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
உங்கள் புத்தகங்கள் விளக்குகளாக இருக்கின்றன.
சூரியனைக் காண விளக்குகள் தேவைப்படுவதில்லை.
எனக்கென்னவோ முரணாக சொன்னாலும்
இன்றைய நாளில் அதுதான் உண்மையோ என்று தோன்றுகிறது.
விளைவு பித்தன் எனக்கு சித்தனாகிப் போனான்.

Mother – First Teacher At Home

Any child to start with, learns saying “Amma” /”Ma”. Mother is the only word which one likes to fix in one’s memory with great enthusiasm and happiness. One can measure anything in terms of money but cannot measure a mother’s love and affection. Mother has been given a prominent place in our culture.

Mother is symbol of love and an embodiment of compassion and sympathy. She is the only person with whom one can confess mistakes, miseries, difficulties, pleasures and privileges. Mother never seeks anything from her children except their well-being. She ignores the faults of her children. If the children attain name and fame her joy knows no limit.

She always teaches moral stories and good habits to her children. Mother is called the “first teacher” at home. If anyone is not taking care of his mother or parents, there is no purpose in his existence. If one has reached a top position in an organization or in a profession, it is needless to state that his mother has influenced his thoughts and helped him attain success in life.

வெள்ளி, 31 அக்டோபர், 2008

நல்லதோர் வீணை

நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி - எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ, - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி - நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
விசையுறு பந்தினைப்போல் - உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன் - நித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும் - சிவ சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன் - இவை அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?

THIRUVALLUVAR

The author of the KURAL was a kindly, libel-minded man and his poetry is a kind of synthesis of the best moral teachings of his age- Fr. Emmons E. White

Thiruvalluvar a weaver, wrote in the most difficult of Tamil makers a religious and philosophical work - the KURAL - expounding moral and political ideals- Dr. Will Durant

It is refreshing to think that a nation which produced so great a man Thiruvalluvar) and so unique a work (KURAL) cannot be a hopeless, despicable race. The morality he preached could not have grown except on an essentially moral soil- Rev. Dr. J. Lazarus

He (Thiruvalluvar) throws the purity of Bunyan's English completely into the shade. No known Tamil work can even approach the purity of KURAL. It is a standing rebuke to the modern Tamil. Thiruvalluvar has clearly proved the richness, melody and power of his mother tongue- Rev. J. Lazarus

The poet (Thiruvalluvar) in fact, stands above all races, caste and sects inculcating a general human morality and worldly wisdom. Not only the ethical content of the book but skill with which the author gives his aphorisms, a poetical setting in a difficult metre have evoked admiration- Dr. A. A. Macdonell