பகவானே,” இந்து சம்பிரதாயத்தில் உயர்ந்த வேதாந்தமும் கூடவே பலவித கிரியைகளும் திருவிழாக்களும் மந்திர தந்திரமுறகளும் இருப்பதன் காரணமென்ன?’
மகனே “நெல்லில் முக்கியமான பொருள் அதனுள் இருக்கும் அரிசியே. அரிசியை மூடிக்கொண்டிருக்கும் உமியை குத்தி எடுத்துவிட்டுதான் அரிசியைப் பயன்படுத்துகிறோம். ஆனால் அரிசி நாள்பட நிற்காது; கெட்டுப் போகும். நெல்லாக இருந்தால் நெடுநாள் கெடாமல் நிற்கும்.
அரிசியை வயலில் விதைத்தால் பயிருண்டாகாது; நெல்லை விதைத்தால்தான் முளைக்கும். அரிசிதான் முளைப்பதாயினும் அது உமியால் மூடப்பட்டு நெல்லாக நிலத்தில் பதிந்தால்தான் முளைவிட்டு வளரும்.
நம்முடைய கர்மத்திற்குக் காப்பாகவும், உயிர் கொண்டு வேரூன்றி வளர்ந்து பயிர் கொடுப்பதற்காகவுமே கிரியைகளும் சடங்குகளும், திருவிழாக்களும் நெல்லின் உமி போல் அமைக்கப்பட்டன். அரிசிதான் வேண்டும்.
ஞானமடைந்தவனுக்குக் கிரியைகளும் சடங்குகளும், திருவிழாக்களும் கோயிலும் வேண்டியதில்லை ஆனால் இவையில்லாமல் ஞானம் மட்டும் தனித்து உபதேசிக்கப்பட்டு இந்து தர்மம் முறையாக வைக்கப்பட்டிருந்தால் அது வேரூன்றிப் பயிராக விளைந்திராது. வயலில் போடப்பட்ட அரிசியைப்போல் முளைவிடாமல் அழிந்து போயிருக்கும்.”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக