சனி, 8 நவம்பர், 2008

படிப்பதே இன்பம்

படிப்பதைப் போன்று இன்பம் தரும் செயல் வேறொன்றில்லை; அதிலும் அறிவார்ந்தவர்களால் பொருள்,சொல்,கலை நயத்தோடு எழுதப்பட்ட நூல்களைக் ஆழ்ந்து கற்பது அமுதுண்பதற்கு ஒப்பானது.
நல்ல நூல்கள் ஒரு மனிதனை நெறிபடுத்துவதோடு வாழ்வின் உன்னதமான உயர்வுக்கு இட்டுச் செல்லும் வலிமை மிகுந்தவை.
நல்ல நூல்களோடு நட்புறவு கொண்டவன் தன் வாழ்வையே சத்திய வேள்வியாக்கி வலிமைப் பெற்றொளிருகிறான்.
நாம் ஆயுள் முழுதும் படித்தாலும் கரைகாணா அளவிலே தமிழில் சங்ககால இலக்கியப் படைப்புகள் கடலென விரிந்தும் ஆழ்ந்தும் கிடக்கின்றன.
கல்விக் கூடங்களில் தேர்வுக்காக அங்கொன்றும் இங்கொன்றும் அலசுவதோடும் மேடை சொற்பொழிவுகளுக்கு மேற்கோள் காட்டுவதோடும் அதன் பயன்பாடு முடிவடைந்து விடுகின்றன.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

படிப்பதே இன்பம் என்றீர்கள். படிக்கும்போது இன்பமாகத்தான் இருக்கிறது. ஆனால், ஓரிரு நாட்களுக்குப் பின் எல்லாம் மறந்து விடுகிறதே ! என்ன செய்வது ?

தமிழ்மாறன் சொன்னது…

இன்பவுணர்வோடு படியுங்கள்; இன்பமாக படிப்பது இதயத்தைவிட்டு மறையாது; இன்பமே எந்நாளும் துன்பமில்லை