கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 10 பிப்ரவரி, 2009

ஏற்போம் சபதமே


படை திரட்டுவோம் – ஈனப்
பகை விரட்டுவோம் – வீர
நடை முடுக்குவோம் – வெற்றி
நகை முழக்குவோம் ... (படை)
திங்களோடு தென்றலோடு
வந்ததெங்கள் தமிழ்மொழி
எங்கிருந்து வந்தவர்க்கும்
வாழ்வளித்த பெருமொழி
சிங்கமக்கள் பெற்றெடுத்த
சீருலாவும் திருமொழி
பங்கமொன்று வருகுதெனில்
பார்த்திடவோ எம்விழி ... (படை)
ஆண்டதமிழ் மீண்டும் ஆள
வேண்டுமிந்த உலகிலே
மாண்டபுகழ் மீண்டுமிங்கு
மலரவேண்டும் கண்ணிலே
தோன்றின் புகழோடு நீயும்
தோன்ற வேண்டும் தமிழனே
ஈன்ற தாயின் நெஞ்சினிக்க
ஏற்கவேண்டும் சபதமே ... (படை)

சனி, 8 நவம்பர், 2008

மரங்களின் கேள்வி


ஏ! மனிதனே எங்களை வெட்டி ஆயிரம் சிலுவைகள் செய்யத் தெரிந்த உங்களுக்கு ஏன் ஓர் இயேசுவைக்கூட உருவாக்கத் தெரியவில்லை