ஞாயிறு, 2 நவம்பர், 2008

குடும்பம் ஒரு கோயில்

உறவுகளின் தொகுப்பாய் உருவெடுத்ததுதான் குடும்பம். தாத்தா-பாட்டி தொடங்கி பேரன்-பேத்தி என ஆலமரமாய் ஆயிரம் விழுது பரப்பிய குடும்பம்தான் இன்று உறவுகளைத் தவிர்த்து ஒற்றைப் பனை மரமாய் ஒதுங்கி நிற்கிறது.

அன்பின் அடித்தளத்தில் எழுந்து நின்ற குடும்பக் கோவில் இன்று பொருள் தேட்டம், இன்ப நாட்டம் என்ற அந்நியக் கலாச்சாரச் சூறைக் காற்றில் ஆட்டங்கண்டு சிறந்த விழுமங்களை இழந்து விழுந்து கிடக்கிறது.

நம் முன்னோர்களின் இல்லற வாழ்வை இனிதாகக் காட்டுவது திருக்குறள். அறம் சார்ந்த வாழ்வும், அன்பு சார்ந்த உறவுந்தான் தமிழர்தம் குடும்பங்களின் அடித்தளம். ‘அறத்தான் வருவதே இன்பம்’ என்று நினைத்தவன்தான் தமிழன்.

’அன்பின் வழியது உயிர்நிலை’ வாழ்ந்தவன்தான் தமிழன். அகவாழ்வின் பண்பாடும், புறவாழ்வின் நாகரிகமும் பழுதுபடாமல் பார்த்துக் கொண்டதுதான் தமிழினம். ஆனால் இன்று ..நினைக்கவே நெஞ்சம் நோகிறது.

ஆணும் பெண்ணும் சேர்ந்து, அன்பு சார்ந்து, அறத்தின் வழியில் நடத்துவதுதான் இல்லறம். ஒருவனும் ஒருத்தியும் கூடி வாழும் இடம்தான் வீடு. துன்பங்களிலிருந்து விடுபட்டு, ஆன்மா பேரின்பத்தில் திளைப்பதுதான் வீடுபேறு.


நம்மைச் சுற்றி இருப்பவர்கள், நம்மோடு பழகுபவர்கள் உணர்வுகளை இன்னும் சற்று விழிப்போடு கையாளுவதுதான் உண்மையான பிராத்தனை.
- வாழ்வே தவம்இறந்த பின்பு அடையும் இன்பத்தை இருக்கும்போதே அடைவதற்கான இடமே வீடு. துன்ப நீக்கமும் இன்ப ஆக்க்மும் உள்ள இடம்தான் உண்மையான வீடு.

கருத்துகள் இல்லை: