செவ்வாய், 3 பிப்ரவரி, 2009

சிட்டுக்குருவிக்கு என் காதல் கீர்த்தனங்கள்

(பாரதியின் ‘குயில் பாட்டு’ எனது மனத்தில் ஏற்படுத்திய மற்றொரு தாக்கத்தின் விளைச்சல்தான் இந்த எழுத்துக்கள். ‘நீலக்கடலோரம் ஒரு நீலக்குயிலின் நீலம்பரிராகம்’ எழுதிய ஏறக்குறைய நான்கு மாதங்களுக்குப் பிறகு இதை எழுதியதாக இந்த எழுத்துச் சுவடியில் குறிப்பிட்டுள்ளேன்.(டிசம்பர் 1987) இயற்கையை முழுமனதோடு எனக்கு நேசிக்கக் கற்றுக் கொடுத்தவன் பாரதி. இன்றுவரை அவனது கையைப் பிடித்துக் கொண்டே வாழ்க்கையின் விரிந்த எல்லைகளை நான் அளந்து வருகின்றேன். ’காக்கை குருவி எங்கள் சாதி’ என்று அவன் உறவு கொண்டாடியதுபோல் நானும் என் வீட்டுக் கூரைகளிலும் இதயத்திலும் கூடுகட்டி வாழும் சிட்டுக்குருவிகளின் மீது அமரக் காதல் உற்றேன். எந்த தேசத்தில் நான் சிடுக்குருவியைப் பார்த்தாலும் எனக்குள் ‘விட்டு விடுதலையாகி நிற்பாய் அந்தச் சிட்டுக்குருவிபோலே’ என்ற் பாரதியின் அன்புணர்வுப் பொங்கியெழும். விட்டக் குறையோ தொட்டக் குறையோ இன்றுவரை என் வீட்டுக் கூரைகளில் சிட்டுக்குருவிகள் இன்பமாக குடும்பம் நடத்தி வருவதைப் பார்த்து மகிழ்கிறேன். அவற்றின் ஆனந்த கீச்சிடும் ஒலிகள்தாம் என் வைகறை பொழுதின் திருப்பள்ளியெழுச்சி. இளவயதில் நான் எழுதிய கீழேயுள்ள இந்தக் கட்டுரையை என்னிடம் சொல்லிக் கொள்ளாமலேயே மறைந்தும் மறையாமலும் வாழும் உறவுகளும் தோழர்களுமான என் வீட்டுச் சிட்டுக்குருவிகளுக்குச் சமர்ப்பணம் செய்கின்றேன்)

சிட்டுக்குருவிக்கு என் காதல் கீர்த்தனங்கள்
அதோ புலர்ந்தும் புலராத வைகறைப் பொன்வான விரிப்பிலே இயற்கையே உன்றன் உயிரோவியம். உன்னைக் கண்டதும் என்னிதய வீணையெங்கும் ஓர் இசையருவியின் ஆனந்த ஆலாபனை. முத்தச்சுவைக்காட்டி முத்தமிழை ஊட்டும் திருமுகமே, உன்னை தரிசிக்கும் போதெல்லாம் நான் புனிதம் அடைகின்றேன்; நித்தம் புதுப்பிறவி எய்துகின்றேன்.
எனது உயிரினில் கலந்திட்ட உறவே, உன்னை எண்ணும்போதெல்லாம் என்னுயிர் தொட்டெழுகிறது ஒரு பாட்டு. காலைப் பசும் பயிர்களைக் கொஞ்சி வரும் தென்றலின் தழுவலில் உன் காதலின் பெருஞ்சுகம் கட்டுண்டு கிடக்கிறது. கனிச்சாறே, குளிர் நிலவு முகிலை மெல்ல கொஞ்சி போவதுபோல் கூடல் நீக்கிச் செல்கின்றாய் எனை வாடவிட்டுச் செல்கின்றாய்
மாசில்லா மணியே, உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே, வழி தப்பியப் பறவை போல் உன்னிடம் பிடிபட்டேன். என்னுள்ளத்தை உலுக்கினாய்; உனது எல்லையற்ற கீதவலையில் மயங்க வைத்து என்னுள்ளத்தைப் பிடித்தாய். வான்மழியில் குள்த்தால் உடலும் உயிரும் சிலிர்ப்பதுபோல் எனது யாழின் நரம்புகளை தடவும்போது என் நெஞ்சம் இசைக்கிறது; என்னுயிரும் உன் பாடலோடு ஒன்றி நிற்கிறது.
யாழ்தன் இசையைத் தாங்வதுபோல நான் உன் அன்பைத் தாங்குவதுடன் அதை உனக்கே இறுதியில் ஆருயிரோடு அளிப்பேனாக. கவின் பெருவனப்பே, ஒவ்வொரு வைகறைப் பொழுதிலும் புதியதோர் பொற்கடிதத்தை என் முன்னே நீட்டுகின்றாய். கார்மேகத்தில் பளிச்சிடும் மின்னல் கீற்றுபோல் பொருள் பொதிந்த பன்னகையைச் சிந்தி என் பாட்டு அலங்காரங்களை மெளனத்தால் கட்டி வைக்கிறாய்.
தாயினும் சாலப்பரிந்து பாலூட்டும் வானமுதே, வாழ்வின் பெருநிதியே, விழிவணக்கம் செய்தபடி வாயில் வீணை விளைவிக்கும் இசைக்கூட்டி நாளும் கவிமழைப் பொழிகின்றேன். உனை நாளும் பொழுதெல்லாம் கூட்டுக் குருவியைப்போல் எனதுள்ளம் கூட்டி மகிழ்ந்திருந்தேன்.
எழுதா பொன் சித்திரமே, எனது ஞாபகப் புறாக்கள் விண்ணில் சிறகடித்துப் பறக்கின்றன. கடலலையின் நுரைச்சுழி அலைகளால் கரைந்துபோன காலத் தடயங்களை இதமாக தடவிப் பார்க்கின்றேன்; அங்கே குறுமணலாய் உன் நினைவுகள் மட்டும் தேங்கிக் கிடக்கின்றன.
அன்றொருநாள் கடலலைகள் கவிதைப் பாடும் மணற்மேட்டில் காதல் இன்பத்தே நாமிருவர் திளைத்தப் பொழுதில் இளந்தென்றல் நம்மிருவர்க்கிடையில் செல்ல துன்புற்று சினந்திருக்க அதை நித்தம் நினைந்துருகி துயில் கொள்ளாமல் மன்றத்து சுடர்விளக்காய்த் துடிக்கின்றேனே. தேன் மறந்து வாழ்கின்ற வண்டு உண்டா? நாளும் உனையெண்ணி நலிகின்ற என் நெஞ்சுள்ளே என்றுறைவாய்?. இங்கு நீயின்றேல் நானில்லை.
நின்னிதழில் அமுதுறிஞ்சிய மங்காத நினைவென்றன் உளத்தெழுந்து வதைக்குமென்னை; புத்தமுதே, வீணை நாதம் இழந்துவிடில் என்ன பயனோ அதுபோல வெந்தழியும் சிந்தையிலே மெழுகாய் உருகுகிறேன். நித்தம் நித்தம் பலவெண்ணி நெஞ்சமெல்லாம் புண்ணாகிப் பித்தாகி மனமுடைந்து பின் தெளிந்து நாளோட அதைத் தொடர்ந்து தானோட காதல் வேள்வித் தீயில் வெந்து கொண்டிருக்கிறேன்.
காசு பணம் இல்லாத ஏழை என்னால் காதலுக்குத் தாஜ்மாகல் போல் கலைக்கோயில் கட்டமுடியாமல் போனாலும் காலத்தாலும் துடைத்தழிக்க முடியாத சொற்கோயில் கட்டுவேன். தோண்டிய மணலிலே ஊறிடும் சுடர்மணி நீரினைப்போல் உன்னை நினைக்கும்போதெல்லாம் கவிதை ஊற்றாய் பிறக்கிறது.
தேனமுதே, பழரசமே என் மனக்குகையிலெல்லாம் மெளனமாய் நீ வரைந்த காதல் உயிரோவியங்கள் அஜுந்தாவைப்போல் அழியாமல் சிரிக்கிறது. நான் மட்டிலுமே இந்த உயிரோவியக் கூடத்திற்குள் சொர்ணச் சிற்பமாய் உள்ளம் நெகிழ்ந்து கொண்டிருக்கின்றேன். என் நெஞ்சப் பொய்கையில் உன் பொன்வரவால் தளையவிழ்த்த தாமரை இன்னும் உன் தடம் பார்த்து விழிபூத்து நிற்கிறது.
உன் அழகிய ஆழக்கருவிழிகளோ ஆழங்காணமுடியாத உயிர்ப்பு மொழியில் தெய்விகத் தன்மை வாய்ந்த காதலின் கீதத்தை சோகமான திகட்டுதலோடு வெளியிடுகிறது. உன் இமைச்சிறகுகளின் கந்தர்வத் துடிப்பு என் நெஞ்சக அடுப்பில் அணைந்து போகாமல் கனன்றெரியும் காதல் பெருநெருப்பிலிருந்து சாம்பலையும் தீப்பொறிகளையும் வீசிறிச் சிதறச் செய்கிறது.
கவிதையின் விளைச்சலே, கற்கண்டு ஊற்றே, இமைப்பொழுதும் மறவா இனிமைத் தவிப்பினிலே நான் இருந்தபோது அன்பின் இன்ப இரகசியத் தாழ்த் திறந்தாய். எண்ணிய போதினிலே எதிர்வந்த இன்பப் பொருளினைப்போல் புண்ணியம் செய்தவர்க்கே கிடைத்திடப் போற்றும் திருவினைப்போல் பிறைநிலவாக நீ வந்தாய். நீ வந்த நாள் முதலாக செந்தமிழ்ப் பூக்காட்டில் வாசத்தேனெடுத்து புத்தம்புது பூங்கவிதைத் தொடுத்து வந்தேன்.
உன்னுடைய பேரமைதி நிரம்பிய நல்லொளியினிலே ஒளியை அள்ளி என்னிதய அறையிலுள்ள இருளைத் தட்டிவிட்டேன். உன் விழிவழி ஒளியைத் தந்துவிட்டு இன்று சிறகொடிந்த பறவையாக என்னை தவிக்கவிட்டுச் சென்றாய். இந்த வைகறைப் பொழுதின் உறவினிலே இதயத்தைப்போல் என் வார்த்தைகள், என் கவிதைகள் யாவும் தடுமாறுகின்றன. உனது கனிந்த பார்வை எனை சில சமயங்களிலாவது நோக்காதா என்ற பேரேக்கம் என்னுள் கடலாய் எழுகிறது.
என் இலட்சியப் பெருங்கனவே, உன் தெய்விக நினைவுகளே என்னை ஒரு கவிஞனாக்கி இயற்கைக் குமிழிகளிலே மூழ்கி மூழ்கி நித்தம் பறந்துவரச் செய்கிறது. இன்பவெறியின் உச்சியிலே நான் இசைக்கருவியாய் ஆவேச முழக்கம் புரிந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மெளனராகம் மீட்டுகின்ற தெய்விகமே, உன் விழிகள் பேசும் மொழியையாவது எனக்குச் சொல்லிக்கொடு. முதல் மழைச் சாரலில் சிலிர்க்கின்ற ரோஜா இதழ்கள் போல் உன் பார்வை இதயவாசல் நுழைந்த நாள் முதலாக இனிய தென்றல் வீசினாலும் பிரிவு புயலாய் என்னை பயமுறுத்துகிறது.
என் காதல் செங்கரும்பே, உன்னை சேரக் குளிர்விக்கின்றாய் சென்றிட்டால் விலகி என்னைத் தீய்கின்ற வித்தையினை எங்கிருந்து பெற்றாய்?. கண்ணிரண்டில் காதலெனும் நோயைத்தந்து கண்ணுறக்கம் பறிக்கின்றாய். கனவிlல் வந்தும் பேதையினை வாட்டுகின்றாய். உன் பிரிவால் என் நெஞ்சே எரிமலையாய் போனது. கொட்டுகின்ற குளிர் அருவியில் குளித்தாலும் காதல் இதயவெப்பம் இன்னும் கனன்றெரிகிறது.

13 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

வணக்கம்...
தங்களின் 'சிட்டுக்குருவிக்கு என் காதல் கீர்த்தனங்கள்' என்ற கட்டுரை என்னை மிகவும் கவர்ந்துள்ளது. அதுமட்டுமள்ள,பாரதியின் குயில் பாட்டில் கண்ட காதல், அமரக் காதலை நான் இந்த சுவடிலும் உணர்கின்றேன். தாங்கள் சிட்டுக்குருவியின் அன்பில் எந்த அளவிற்கு இலயித்து உங்களையே கொடுத்திருக்கின்றீர்கள் என உங்கள் உள்ள மொழியில் காணமுடிகின்றது. படிப்பதற்கே இனிமையாக இருக்கின்றது. தாங்கள் மேலும் இது போன்ற எழுத்துகளைப் படைக்க என் மனமார்ந்த வாழ்துக்கள்.நன்றி

தங்களின் 'சிட்டுக்குருவிக்கு என் காதல் கீர்த்தனங்கள்' என்ற கட்டுரை என்னை மிகவும் கவர்ந்துள்ளது. பாரதியின் குயில் பாட்டிற்கு அடுத்து சிட்டுக்குருவியின் மேல் காதல், அமரக் காதல் கொண்ட தங்களின் எழுத்து படிவம் மிக அற்புதம். தாங்கள் கொண்டுள்ள உண்ணதமான அன்பினை தங்களின் எழுத்துச் சுவடின் மூலம் புரிந்து கொண்டேன். தாங்கள் சிட்டுக்குருவியின் அன்பிற்கு ஏங்கும் விதமும் அதை எழுத்தாக படைத்த முறையும் நன்றாக உள்ளது. அதுமட்டுமள்ள அவளின் ஒவ்வொரு அசைவையும் பாரதியைப் போல் நீங்கள் அழகாக எடுத்துரைப்பது, மேலும் படித்து சுவைக்காண ஆவலை ஏற்படுத்துகின்றது. ஒரு சாதாரண மானிடனும் நம்மைச் சுற்றி நிழலாக இருக்கும் அனைத்து உயிர்களிடத்தும் காதல் கொண்டால், நிச்சயம் இனம்புரியா சக்தியினையும் அரவனைப்பினையும் நம்மால் உணர முடியும்.உங்கள் சிட்டுக்குருவிக்கும் என் அன்பான வணக்கம் உரித்தாகட்டும். தொடர்ந்து இது போன்ற கட்டுரைகளைத் தருவதற்கு என் மனமார்ந்த வாழ்துகள். நன்றி

தங்களின் 'சிட்டுக்குருவிக்கு என் காதல் கீர்த்தனங்கள்' என்ற கட்டுரை என்னை மிகவும் கவர்ந்துள்ளது. பாரதியின் குயில் பாட்டிற்கு அடுத்து சிட்டுக்குருவியின் மேல் காதல், அமரக் காதல் கொண்ட தங்களின் எழுத்து படிவம் மிக அற்புதம். தாங்கள் கொண்டுள்ள உண்ணதமான அன்பினை தங்களின் எழுத்துச் சுவடின் மூலம் புரிந்து கொண்டேன். தாங்கள் சிட்டுக்குருவியின் அன்பிற்கு ஏங்கும் விதமும் அதை எழுத்தாக படைத்த முறையும் நன்றாக உள்ளது. அதுமட்டுமள்ள அவளின் ஒவ்வொரு அசைவையும் பாரதியைப் போல் நீங்கள் அழகாக எடுத்துரைப்பது, மேலும் படித்து சுவைக்காண ஆவலை ஏற்படுத்துகின்றது. ஒரு சாதாரண மானிடனும் நம்மைச் சுற்றி நிழலாக இருக்கும் அனைத்து உயிர்களிடத்தும் காதல் கொண்டால், நிச்சயம் இனம்புரியா சக்தியினையும் அரவனைப்பினையும் நம்மால் உணர முடியும்.உங்கள் சிட்டுக்குருவிக்கும் என் அன்பான வணக்கம் உரித்தாகட்டும். தொடர்ந்து இது போன்ற கட்டுரைகளைத் தருவதற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி

பெயரில்லா சொன்னது…

வணக்கம்...
தங்களின் 'சிட்டுக்குருவிக்கு என் காதல் கீர்த்தனங்கள்' என்ற கட்டுரை என்னை மிகவும் கவர்ந்துள்து. பாரதியின் குயில் பாட்டிற்குப் பின் சிட்டுக்குருவியிக்கு காதல் மடலை நான் படிக்கின்றேன். இதில் பாரதியைப் போல் தாங்களும் அழகு பொருந்திய மொழிநடையினைக் கொண்டு சிட்டுக்குருவியின் மேல் காதல், அமரக் காதல் கொண்டு தவிப்பது படிக்க படிக்க ஆவலை ஏற்படுத்துகின்றது. அவள் மிகவும் கொடுத்து வைத்தவள். சிட்டுக்குருவியின் மேல் கொண்ட அன்பில் நீங்கள் இலயித்து, அதனை விளக்க நீங்கள் கையாண்ட அழகான மொழி தங்களின் எழுத்து சுவடிற்கு புத்துயிர் அளிக்கின்றது. மேலும் படிக்கும் ஆவலைத் தூண்டுகின்றது. நம்மைச் சுற்றி நிழலாக இருக்கும் அனைத்து உயிர்களிடத்தும் நாம் காதல் கொண்டால், ஓர் உண்ணதமான அன்பும் அரவனைப்பும் வந்து சேரும் என்பதனை உணர்ந்து கொண்டேன். உங்கள் காதலி சிட்டுக்குருவிக்கும் என் அன்பான வணக்கம். மேலும் இதுபோன்ற கட்டுரை மேலும் தங்களின் கைவண்ணத்தில் பிறக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். வாழ்த்துகள்.
நன்றி

பெயரில்லா சொன்னது…

வணக்கம்...
தங்களின் 'சிட்டுக்குருவிக்கு என் காதல் கீர்த்தனங்கள்' என்ற கட்டுரைன் என் மனதை வெகுவாக கவர்ந்தது. பாரதியின் குயில் பாட்டிற்கு அடுத்து சிட்டுக்குருவிக்கு தாங்கள் எழுதிய காதல் மடலையும் படித்தேன். பாரதியைப் போல் தாங்களும் தங்களின் காதல், அமரக் காதலில் இலயித்து அதனை சொல் என்ற அம்பினால் அழகாக அடுக்கியுள்ளீர்கள். அதுமட்டுமல்ல, இதுபோன்ற காதலை நினைத்ததோடு நின்றுவிடாமல் வாசகர்களுக்காக புதிய சொற்களும் மொழி நயமும் பயன்படுத்தி சிட்டுக்குருவிக்கு எழுதிய காவியம் அந்த சிட்டுவையே மயக்கும் வகையில் உள்ளது. நம்மைச் சுற்றியுள்ள அனைத்து உயிர்களும் நிழலாக நம்மைப் பின்தொடர்ந்து வருகையில், அவ்வுயிர்களிடையே நாம் கொள்ளும் காதலானது புதிய அன்பினையும் அரவனைப்பும் தரவல்லது என்பதனை இக்கட்டுரைப் படித்து உணர்ந்து கொண்டேன். உங்களின் சிட்டு கொடுத்துவைத்தவள். உங்கள் சிட்டுக்குருவிக்கு என் அன்பான வணக்கம் சமர்ப்பனம். மேலும் இதுபோன்ற படைப்புகளை கொடுக்க என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி

தங்களின் கட்டுரை மிக நன்றாக உள்ளது. கருத்துரைக்க கடினமாக உள்ளது.

பெயரில்லா சொன்னது…

வணக்கம். தங்களின் இதயமையத்தில் இடம் பிடித்த அந்தக் கட்டுரையின் நாயகி 'சிட்டம்மா'விடம் வாழ்த்துகளைச் ச்மர்ப்பிக்கின்றேன். அவசரமாக சுழலும் வாழ்க்கையில் பலராலும் கண்டு கொள்ளப்படாத நிறைய விசயங்களை மெல்ல அசைபோட்டு எழுதுவதற்கு ஆவலுண்டு.காலம் கனியட்டும் தோழி. நன்றி

தமிழ்மாறன் சொன்னது…